ஜூலை 27 ரிலீசாகிறது விஜய் சேதிபதியின் ஜூங்கா

news18
Updated: July 12, 2018, 8:36 PM IST
ஜூலை 27 ரிலீசாகிறது விஜய் சேதிபதியின் ஜூங்கா
ஜூங்கா
news18
Updated: July 12, 2018, 8:36 PM IST
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ஜூங்கா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் 27-ம் தேதி ஜூங்கா திரைக்கு வர இருக்கிறது.

விஜய் சேதுபதியை ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் இயக்கிய கோகுல் தற்போது ஜூங்கா படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நகைச்சுவை பிரபலம் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே, இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம். எனவே, விஜய் சேதுபதியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நடிகர் அருண் பாண்டியன் இதன் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியானது. வெளியிட்ட நாள் முதல் படத்தி ட்ரெய்லருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. முக்கியமாக விஜய் சேதுபதியின் கெட்அப் டயலாக் டெலிவரி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த ட்ரெயிலர் 50 லட்சம் பேருக்கும் மேல் பார்த்துள்ளனர்.  தற்போது படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதால் வரும் 27-ம் தேதி படத்தை ரீலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்