Home /News /entertainment /

விக்ராந்த் படத்திற்கு வசனம் எழுதும் விஜய் சேதுபதி

விக்ராந்த் படத்திற்கு வசனம் எழுதும் விஜய் சேதுபதி

நடிகர்  விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி

இயக்குனர் சஞ்சீவ் இயக்கத்தில் நடிகர் விக்ராந்த் நடிக்கும் ’தாக்க தாக்க’ படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதுகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் அண்மையில் தமிழில் வெளியான மிகச்சிறந்த காதல் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘தாக்க தாக்க’ திரைப்படத்திற்கு திரைகதை மற்றும் வசனம் எழுத விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ‘தாக்க தாக்க’ படத்தின் இயக்குனரான சஞ்சீவ், நடிகர் விக்ராந்த்தின் சகோதரர். அவர் இந்தக் கதையை விஜய் சேதுபதிக்காகவே எழுதியுள்ளார். ஆனால் விஜய் சேதிபதி இந்த கதை விக்ராந்துக்குதன் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

    விஜய் சேதுபதி ‘டெக்கான் க்ரானிகல்’ பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், விக்ராந்த் நடிக்கும் ‘தாக்க தாக்க’ படத்திற்கு இயக்குநர் சஞ்சீவுடன் இணைந்து வசனங்களை எழுத உள்ளதாக கூறியுள்ளார். மேலும் சஞ்ஜீவ் கூறுகையில், இந்தப் படத்தை விஜய் சேதுபதிக்காகதான் எழுதினேன். ஆனால் அவர் இந்த கதை விக்ராந்துக்குதான் பொருந்தும் என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

    விஜய் சேதுபதியுடன் இயக்குநர் சஞ்ஜீவ்


    விஜய் சேதுபதி தான் தயாரித்து நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு சஞ்சீவ் திரைக்கதை மற்றும் வசனம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Actor vijay sethupathi, Actor Vikranth, Thakka Thakka

    அடுத்த செய்தி