Home /News /entertainment /

உபெனா: விஜய் சேதுபதியின் மிரட்டல் லுக் ரிலீஸ்!

உபெனா: விஜய் சேதுபதியின் மிரட்டல் லுக் ரிலீஸ்!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

உபென்னா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்ப் படங்களைத் தாண்டி மற்ற மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

அந்தப் படத்தை அடுத்து தமிழில் பிசியான நடிகர் விஜய் சேதுபதி தற்போது மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் உபெனா என்ற தெலுங்குப் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரங்கஸ்தலம் பட இயக்குநர் சுகுமார் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் வ்வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ராயாணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.



மேலும் படிக்க: அஜித் ஸ்டைலில் சூட்டிங் ஸ்பாட்டில் கலக்கும் சூரி - வைரல் வீடியோ
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor vijay sethupathi

அடுத்த செய்தி