டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
96 படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். மேலும் படத்தில் நடிகை மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதில் இரண்டு விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் விஜய் சேதுபதி இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. இந்தப் படம் அரசியலை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளதாகவும் கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் மீண்டும் தொடங்க உள்ளது.
சன் டிவியின் சமூகவலைதள பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜய் சேதுபதி விஜய் உடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கப்படும் போது வெளியாகும் முதல் படமாக மாஸ்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி நடித்திருக்கும் க.பெ/ரணசிங்கம் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.