ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி.. வெளியாகியுள்ள புதிய தகவல் என்ன?

வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி.. வெளியாகியுள்ள புதிய தகவல் என்ன?

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் (Vijay) நடிக்க உள்ளதாகவும், விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) கூட்டணியில் ஒரு படம் உருவாகப்போகிறது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் (Vijay) நடிக்க உள்ளதாகவும், விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை வைத்து பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. 

ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. மேலும் இது பலூன் விற்பனையாளரைப் பற்றிய கதை ஆகும். வட சென்னை, அசுரன் போன்ற படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு, சூரி நடித்து வரும் இந்த படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். வெற்றிமாறன் மற்றும் இளையராஜா கூட்டணியில் தயாராகும் முதல் படம் இது. படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கடும் குளிரான இடங்களில் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளதால், வெற்றிமாறன் படத்திலிருந்து பாரதிராஜா விலகிவிட்டார். பின்பு கிஷோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று அவரும் விலகினார். இதனால் இந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டி இருந்தது. அவர் முதலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பல பணிகளை மேற்கொண்டதால் கால் ஷீட் தேதி சிக்கல்கள் காரணமாக படத்தில் இருந்து விலகினார் என்றும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது வரவிருக்கும் தமிழ் திரைப்படமான மாஸ்டர் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். அந்த படத்தில் அவர் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும், இந்தியா கிளிட்ஸின் அறிக்கையின்படி, வெற்றிமாறன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் தளபதி விஜய் ஒரு முக்கிய பாத்திரத்திற்காக கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதாபாத்திரத்தின் தோற்ற சோதனையை கூட முடிந்ததாகவும் கூறப்படுகிறது. சூரி படத்திற்கான திட்ட பணிகளை முடித்த பின்னர், வெற்றிமாறன் தனது அடுத்த திட்டத்திற்கான படப்பிடிப்பை சூரியாவுடன் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு "வாடிவாசல்" என்று பெயரிடப்பட்டுள்ளது. சி.எஸ்.செல்லப்பா எழுத்தில் உருவாகும் இந்த படம், ஒரு காளை மற்றும் அதைப் அடக்குபவர் பற்றிய கதை. தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த பழங்கால விளையாட்டான ஜல்லிக்கட்டு பின்னணியில் இந்த படம் உருவாக உள்ளது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Acor Vijay, Actor vijay sethupathi, Vetrimaran