ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கமல் ஹாசன் தயாரிக்கும் படத்தில் உதயநிதிக்கு பதில் நடிப்பது இவர் தான்!

கமல் ஹாசன் தயாரிக்கும் படத்தில் உதயநிதிக்கு பதில் நடிப்பது இவர் தான்!

உதயநிதி ஸ்டாலின் - கமல் ஹாசன்

உதயநிதி ஸ்டாலின் - கமல் ஹாசன்

உதயநிதியை வைத்து தயாரிக்க நினைத்த படத்தை கைவிட வேண்டாம் என கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் உதயநிதிக்கு பதில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகப் பதவியேற்ற பிறகு இனி நடிக்கப் போவதில்லை என அறிவித்தார். இதையடுத்து உதயநிதியை வைத்து தயாரிக்க நினைத்த படத்தை கைவிட வேண்டாம் என கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அதனால், உதய்க்கு பதிலாக விஜய் சேதுபதியை அப்படத்தில் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவன செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்ற நிலையில், “விக்ரமுக்குப் பிறகு கமல்ஹாசனும் விஜய் சேதுபதியும் நல்ல நட்பில் உள்ளனர். மேலும் சேதுபதி இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று கமல் நம்புகிறார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்திருக்கிறார் அவர்களுக்கு நெருக்கமான மற்றொருவர்.

150 கோடி சம்பளம்... விஜய்யின் தளபதி 68 படத்தின் ஹாட் அப்டேட்!

இது நடந்தால், விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசன் இணையும் இரண்டாவது படமாக இப்படம் அமையும். தவிர, சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளதாக கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் மணிரத்னத்துடன் அவர் இணையும் படத்தின் முன் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kamal Haasan, Tamil Cinema, Udhayanidhi Stalin, Vijay sethupathi