பிரபல ஹீரோவுக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி?

பிரபல ஹீரோவுக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி

இதன் பூஜை முடிந்து, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 • Share this:
  விஜய்க்கு வில்லனாக நடித்ததைத் தொடர்ந்து, மீண்டும் பிரபல ஹீரோ ஒருவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

  பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இதில் வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதில் ஹீரோ, வில்லன் என இருவரின் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. முழு நீள ஹீரோவாக மட்டுமல்லாமல், சிறப்புத் தோற்றம், வில்லன், காமெடி என அனைத்துக் கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

  இந்நிலையில் தற்போது மீண்டும் பிரபல ஹீரோ ஒருவருக்கு அவர் வில்லனாக நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் அதன் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருக்கிறார். இதையடுத்து அவர் பிரபாஸை ஹீரோவாக வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்குகிறார்.

  அந்தப் படத்தை கே.ஜி.எஃப் படங்களை தயாரித்த, ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் பூஜை முடிந்து, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க, விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: