‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, கதை பிடித்திருந்தால் மற்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்கவும் தவறுவதில்லை. ரஜினிகாந்தின் பேட்ட, சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மா ரெட்டி, விஜய் உடன் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்திருருக்கும் விஜய்சேதுபதி அடுத்தபடியாக கமல்ஹாசன் உடன் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், இந்தப் படத்துக்கு பின்னர் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் தேவர் மகன் படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற டைட்டிலுடன் கமல்ஹாசன் உடன் விஜய் சேதுபதி இன்ஸ்டாகிராமில் உரையாடியதை அடுத்து அவர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது.
இந்நிலையில் அவர் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது. தேவர் மகன் கதைப்படி விஜய் சேதுபதி நாசரின் மகன் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பதே அத்தகவல். ஆனாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் படக்குழு வெளியிடவில்லை.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.