Home /News /entertainment /

பேட்ட: ரஜினிகாந்த் வெளியில் பார்ப்பது மாதிரி அல்ல... விஜய்சேதுபதி ஓபன் டாக்!

பேட்ட: ரஜினிகாந்த் வெளியில் பார்ப்பது மாதிரி அல்ல... விஜய்சேதுபதி ஓபன் டாக்!

நடிகர் விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் விஜய்சேதுபதி  ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் மற்றும் நவாசுதீன் சித்திக்கின் நடிப்பை புகழ்ந்து பேசியுள்ளார்.

    புதுமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘96’. இத்திரைப்படம் குறித்த கலந்துரையாடல் வளசரவாக்கத்தில் உள்ள கூகை திரைப்பட இயக்கத்தின் நூலகத்தில் நடைபெற்றது. பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், தமிழ் பிரபா, இயக்குனர் வசந்தபாலன் மற்றும் வாசுகி பாஸ்கர் ஆகியோர் கல்ந்துகொண்டு இத்திரைப்படம் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய விஜய் சேதுபதி உதவி இயக்குனர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள், அறிவுரைகளை வழங்கினார்.

    அப்போது அங்கு கூடியிருந்த உதவி இயக்குநர்கள் அவரிடம் ரஜினிகாந்த் குறித்தும், நவாசுதீன் சித்திக்கின் நடிப்பு குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி, ”நவாசுதீன் சித்திக் நல்ல நடிகர். ரஜினிகாந்த்தை வெளியில் பார்ப்பது போல் அல்ல. ஒவ்வொரு ஷாட்டுக்கு முன்பும் அவர் மெனக்கெடுகிறார். ரஜினிகாந்த் மிகச் சிறந்த நடிகர் அவரை பக்கத்திலிருந்து பார்த்து நான் உணர்ந்தேன். நவாசுதீன் சித்திக் மிகவும் இயல்பாக நடிக்கக் கூடியவர். அவர் தனது இயல்புத் தன்மை திரைமொழியோடு தொடர்பு கொள்ளும் என்று நம்பக் கூடியவர். நான் நிறைய சொல்வதை விட, படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வரும்” என்று கூறினார்.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் எப்போது நடிப்பீர்கள்?: விஜய்சேதுபதியின் அசத்தல் பதில்
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor vijay sethupathi, Petta, Rajinikanth, Vijay sethupathi

    அடுத்த செய்தி