முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜோதிகா பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தேனா? - விஜய் சேதுபதி விளக்கம்

ஜோதிகா பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தேனா? - விஜய் சேதுபதி விளக்கம்

விஜய் சேதுபதி | ஜோதிகா

விஜய் சேதுபதி | ஜோதிகா

ஜோதிகாவின் பேச்சுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில் பலர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

ஜோதிகா பிரகதீஸ்வரர் கோயிலைப் பற்றி பேசியதற்கு ஆதரவு தெரிவித்தேனா என்பது பற்றி நடிகர் விஜய்சேதுபதி விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற விருது விழா ஒன்றை தனியார் சேனல் சமீபத்தில் ஒளிபரப்பியது. அந்த வீடியோவின் சில பகுதிகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ஜோதிகாவின் பேச்சுக்கு எதிராக பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் ஜோதிகா பேசியிருப்பதாவது, பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது, அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.

அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை  பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

நான் கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என்று கூறினார்.

ஜோதிகாவின் இந்தப் பேச்சுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில் பலர் ஆதரவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதை மறுத்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி, இது போலியானது என்றும் ட்வீட் செய்துள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Actor Vijay Sethupathy