கமல்ஹாசன் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன் என்று கமல் 60 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், "உங்கள் நான்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
ரஜினி, இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசுகையில், “மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரே பிடித்துள்ளது.
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். எல்லோரும் இணைந்து இருப்போம் என்பதையே கட்சியின் லோகா சொல்வதாக உணர்கிறேன். கமல்ஹாசன் மக்களை ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்” என்று கூறினார்.
Also See...
”எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்... ஆனால் அதிசயம் நிகழ்ந்தது” - ரஜினிகாந்த்
அரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும்! உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி
ரஜினி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்! கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு
Also See...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.