இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற டைட்டில் உடன் உருவாக இருந்தது. இத்திரைப்படத்தில் முரளிதரன் கேரக்டரில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
படம் குறித்த அறிவிப்பு அறிவிப்பு வெளியானதிலிருந்தே எதிர்ப்புகளும் எழத் தொடங்கின. தமிழகத்து மக்கள் போற்றும் நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தமிழினத்துக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்கக் கூடாது என அரசியல்வாதிகள், தமிழ்த்தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்தனர்.
எதிர்ப்புகள் வலுக்கவே விஜய் சேதுபதியை இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டார் முத்தையா முரளிதரன். அவரது அறிக்கையை ரீட்வீட் செய்து நன்றி.. வணக்கம் என்று கூறி ‘800’படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி. இந்த சர்ச்சையின் போது விஜய் சேதுபதி மகளுக்கு Rithik (Handle: @ItsRithikRajh) என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து வக்கிரமான வார்த்தைகளுடன் மிரட்டல் விடுக்கப்பட்டது.
மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று திமுக எம்.பி. கனிமொழி குறிப்பிட்டிருந்தார்.
There has been lot of concern in social media regarding comments made in social media against a celebrity. On receipt of complaint to this effect a case in Cyber Cell has been registered.