அமீர்கான் படத்தில் நடிக்காததற்கு இதுதான் காரணம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய் சேதுபதி!

அமீர்கான் படத்தில் நடிக்காததற்கு இதுதான் காரணம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய் சேதுபதி!

அமீர்கான், விஜய்சேதுபதி

ஊரடங்கிற்கு பிறகு சுமார் 5 தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளேன். அதன் காரணமாகவே, லால் சிங் சத்தாவுக்கு இடமளிக்க முடியவில்லை. எதிர்காலத்தில் அமீர்கானுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றால் கட்டாயம் நடிப்பேன்" என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தி திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவர் தான் நடிகர் அமீர்கான். தனது அனைத்து படங்களிலும் கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து நடிக்கும் திறமை கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் இவர். மேலும், ஒவ்வொரு படத்திலும் அந்தந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றாற் போல தனது தோற்றத்தை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்துவதில் வல்லமை படைத்தவர். சமீபத்தில் இவரது படத்தில் தமிழ் திரையுலக ரசிகளர்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஏற்கனவே, தனது நடிப்பால் தமிழ் திரையுலகல் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை விஜய் சேதுபதி வைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்தி திரையுலகிலும் என்ட்ரி கொடுக்கப்போகிறார் என்ற செய்தி வெளியானவுடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தனர். ஆனால் திடீரென அமீர்கான் நடிப்பில் உருவாகி வரும் "லால் சிங் சத்தா" படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகினார் என்ற செய்திகள் வெளியாகின. அதற்கு சில காரணங்களும் வதந்தியாக பரவி வந்தன. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி 6 ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘பாரஸ்ட் கம்’ என்ற படத்தினை தான் இந்தியில் "லால் சிங் சத்தா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அமீர்கான் தனது உடல் எடையை 21 கிலோ குறைத்து நடிக்கிறார். மேலும் அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

அதேபோல, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதியும்  25 கிலோ உடல் எடையை குறைத்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், படத்திற்காக உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தால் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக வதந்திகள் கசிந்தன. இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அமீர்கான் இயக்கி வரும் படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், எடை குறைப்பது என்பது எனக்கு ஒரு பிரச்சனை அல்ல என்பதை தெளிவுப்படுத்தினார். மேலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, " அமீர் சார் தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த கதாபாத்திரத்தை வழங்கினார்.

Also read... ’தி கிரே மேன்’ படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்தது!

பின்பு நான் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது, அவர் எனக்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். மேலும், படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் எனக்கு விளக்கமாக கூறினார். சில காரணங்களால் இயக்குனர் அத்வைத் சந்தன் வர முடியவில்லை. அமீர் சார் மட்டும் தனியாக வந்து, ஸ்கிரிப்டை விவரித்து, அன்று இரவு அதே ஊரில் தங்கி விட்டு பிறகு மறுநாள் காலையில் கிளம்பினார். இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாதவர். மேலும் அவர் அற்புதமாக கதை சொல்பவர். அவர் கதையை விவரித்த விதம் நம்மை மயக்கும். நான் உடனேயே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்." இருப்பினும் விஜய் சேதுபதி வேறு சில படங்களில் கமிட்டாகி இருந்ததால், லால் சிங் சத்தா படத்திற்கு தன்னால் டேட்ஸ் தர முடியவில்லை என விளக்கம் அளித்தார்.

"கொரோனா தொற்றுநோய் காரணமாக படப்பிடிப்பு தள்ளி போனதால் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தேதிகள் பாதித்துள்ளன என்றார். ஊரடங்கிற்கு பிறகு சுமார் 5 தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளேன். அதன் காரணமாகவே, லால் சிங் சத்தாவுக்கு இடமளிக்க முடியவில்லை. எதிர்காலத்தில் அமீர்கானுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றால் கட்டாயம் நடிப்பேன்" என்று அவர் கூறியுள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான "மாஸ்டர்" திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்ததன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் பிஸி ஹீரோவாக விஜய் சேதுபதி வலம் வருகிறார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: