Home /News /entertainment /

திருநங்கையாக நடித்தது இப்படித்தான்! - வீடியோ வெளியிட்ட விஜய் சேதுபதி

திருநங்கையாக நடித்தது இப்படித்தான்! - வீடியோ வெளியிட்ட விஜய் சேதுபதி

சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்புத்தளம்

சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்புத்தளம்

திருநங்கையாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
திருநங்கையாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடித்துள்ளார். அவருடன் பகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.



இந்தப் போஸ்டர் விஜய் சேதுபதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் திருநங்கையாக நடித்திருக்கும் விஜய்சேதுபதியின் தோற்றம் குறித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்ட நடிகர் அசோக் செல்வன், "காத்திருக்க முடியாது. நீங்கள் ஒரு பொம்பள நாட்டுக்கட்டையும் கூட " என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு , “அன்று ஒரு நாள் ஷில்பா உடன் இயக்குநர் தியாகராஜன்குமாரராஜா” என்று தலைப்பிட்டிருக்கிறார். சில விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய அந்த வீடியோவில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா நடிப்பு சொல்லித்தரும் காட்சிகளும், விஜய் சேதுபதி நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor vijay sethupathi, Super Deluxe, Vijay sethupathi video

அடுத்த செய்தி