விஜய் சேதுபதி வெளியிட்ட ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ ட்ரைலர்!

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ ட்ரைலர்!

விஜய் சேதுபதி

’சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் இளையராஜா ‘சொக்குறேன் சொக்குறேன்’ என்ற பாடலை பாடியிருக்கிறார்.

 • Share this:
  ’சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்தின் ட்ரைலரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

  காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, மாஸ்டர் மகேந்திரனுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘சிதம்பரம் ரயில்வே கேட்’. இதில் ஹீரோயினகளாக நீரஜா, காயத்ரி நடித்துள்ளனர். கிரவுன் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.எம்.இப்ராஹிம் தயாரித்திருக்கும் இந்தப் படம் 1980-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள், இவர்களுக்குள் ஏற்படும் பகை, காதல் ஆகியவற்றை மிக எதார்த்தமாக சொல்லும் இந்தப் படத்தை சிவபாலன் இயக்கியிருக்கிறார்.  ’சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் இளையராஜா ‘சொக்குறேன் சொக்குறேன்’ என்ற பாடலை பாடியிருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு இதன் படபிடிப்பு தொடங்கியது. சில காரணங்களால் படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. அனைத்தும் முடிந்து வெளியிடும் தருவாயில் கடந்தாண்டு கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டது.

  இந்நிலையில் தற்போது ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: