Home /News /entertainment /

’அது முடிஞ்சுப் போன பிரச்னை’ முக்கியக் கேள்வியை தவிர்த்த விஜய் சேதுபதி

’அது முடிஞ்சுப் போன பிரச்னை’ முக்கியக் கேள்வியை தவிர்த்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

"விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் மக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி” எனத் தெரிவித்தார்.

    தமிழ் சினிமாவில் படு பிஸியான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அவரது நடிப்பில் பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியானது.

    விஜய் நடித்த அந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் நேற்று நாவலூரில் தனியார் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, ”மாஸ்டர் படம் மூலம் திரையரங்குக்கு மக்கள் மீண்டும் வந்திருக்கிறார்கள். இதற்காக விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் மக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி” எனத் தெரிவித்தார்.

    அப்போது அவரிடம் ’800’ திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ''800' பட பிரச்னை முடிந்துவிட்டது. அதை மீண்டும் கிளப்பாதீர்கள்' என்று தவிர்த்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ’800’ திரைப்படம் இயக்கப்படவிருந்தது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார்.

    ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருந்தவர் முத்தையா முரளிதரன் எனக் கூறி அந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அப்படம் நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor vijay sethupathi

    அடுத்த செய்தி