• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நெஞ்சார்ந்த நன்றி... விஜய்யுடன் நடிப்பது குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!

நெஞ்சார்ந்த நன்றி... விஜய்யுடன் நடிப்பது குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!

விஜய் | விஜய்சேதுபதி

விஜய் | விஜய்சேதுபதி

  • News18
  • Last Updated :
  • Share this:
    ‘தளபதி 64’ படத்தில் இணைந்தது குறித்து நடிகர் விஜய்சேதுபதி முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

    அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா - மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பிகில் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

    இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பேட்ட படத்தை அடுத்து இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி.



    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் விஜய்சேதுபதி, “இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்தது மகிழ்ச்சி. லலித் குமார் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நெஞ்சார்த்த நன்றி” என்று கூறியுள்ளார்.

    வீடியோ பார்க்க: என்ன சொல்றாங்க நம்ம பிகில் புள்ளிங்கோ?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: