வெற்றிமாறன் படத்தில் இணைந்த நடிகர் விஜய் சேதுபதி

வெற்றிமாறன் படத்தில் இணைந்த நடிகர் விஜய் சேதுபதி

வெற்றிமாறன் - விஜய் சேதுபதி

வெற்றிமாறன் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.

  • Share this:
அசுரன் பட வெற்றியை அடுத்து ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தின் ஒரு கதையை இயக்கிய வெற்றிமாறன், சூர்யாவின் வாடிவாசல், சூரி நாயகனாக நடிக்கும் படம், அதை அடுத்து மீண்டும் தனுஷ் உடன் கூட்டணி என பிஸியாகியுள்ளார். இதனிடையே நடிகர் விஜய்க்கு கதை ஒன்றை தயார் செய்து வருவதாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதில் முதலாவதாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை கையிலெடுத்திருக்கிறார் வெற்றிமாறன். இந்தப் படத்துக்காக நடிகர் சூரி சிக்ஸ் பேக் வைத்து தனது உடலமைப்பை மாற்றியிருந்தார். பூமணியின் ‘வெக்கை’ நாவலை அசுரன் என்ற திரைப்படமாக்கிய வெற்றிமாறன் இந்தமுறை ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி சூரி நடிக்கும் திரைப்படத்தை இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார் வெற்றிமாறன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருவதாகவும், இளையராஜா 8 பாடல்களை முடித்துக் கொடுத் திருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து அதிகம் குளிரான இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுவதால் உடல்நிலையைக் காரணம் காட்டி பாரதிராஜா படத்திலிருந்து விலகியதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் கிஷோர் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

பின்னர் நடிகர் கிஷோரும் படத்திலிருந்து விலகியதால் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வயதான அந்த கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். அவருக்கான போட்டோ ஷூட், லுக் டெஸ்ட் ஆகியவை 4-ம் தேதி எடுக்கப்பட்டு நேற்றிலிருந்து அவர் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால் அப்போது கால்ஷீட் பிரச்னை காரணமாக முடியாமல் போனது. தற்போது முதல்முறையாக வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணி இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: