ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vijay Sethupathi: தமிழ்ப் போராளித் தலைவராக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி...!

Vijay Sethupathi: தமிழ்ப் போராளித் தலைவராக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி...!

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

தி பேமிலி மேன் மூன்றாவது சீஸனில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைப்பதில் ராஜ் & டிகே உறுதியாக உள்ளனராம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தி பேமிலி மேன் 2 சீரீஸில் தமிழ்ப் போராளித் தலைவராக நடிக்க முதலில் விஜய் சேதுபதியை அணுகியது தற்போது தெரிய வந்துள்ளது.

ராஜ் & டிகே எழுதி இயக்கிய தி பேமிலி மேன் சீரிஸ் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் சீஸனில் இந்தியாவை தாக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சீரிஸின் நாயகன் ஸ்ரீகாந்த் திவாரி (மனோஜ் பாஜ்பாய்) முறியடிப்பதாக காட்டினர். இரண்டாவது சீஸனில் ஈழப்போராளி சமந்தா, பாகிஸ்தான் தீவிரவாதியுடன் இணைந்து இந்தியப் பிரதமரை கொலை செய்ய முயற்சிப்பதாக காட்டினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதில் போராளிகளின் தலைவராக மைம் பேபி நடித்திருந்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வேடத்தில் நடிக்க முதலில் விஜய்சேதுபதியை அணுகியதாகவும், அவர் நடிக்க மறுப்புத் தெரிவித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்து, ஈழ அரசியலை மட்டுமே கொள்கையாகக் கொண்ட அமைப்புகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக அப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக நேரிட்டது. இறுதியில் அந்தப் படமே கைவிடப்பட்டது. இந்த முன் அனுபவத்தால் ஈழப்போராளித் தலைவராக நடிக்க அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அதுவொரு சின்ன கதாபாத்திரமும்கூட.

Also read... Vijay: 65-வது படத்தின் டைட்டிலை வெளியிட்ட விஜய்... ட்விட்டரில் கொண்டாடும் பிரபலங்கள்!

சமீபத்திய தகவல், தி பேமிலி மேன் மூன்றாவது சீஸனில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைப்பதில் ராஜ் & டிகே உறுதியாக உள்ளனராம். தெலுங்கில் விஜய் சேதுபதி பிரபலம். இந்தியில் இரு படங்களில் நடிக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் அவர் இந்திய அளவில் தெரிந்த முகமாகிவிடுவார், வியாபாரத்துக்கு அவரது முகம் உதவும் என விரிவாக கணக்குப் போட்டு காயை நகர்த்துகின்றனர்

விஜய்சேதுபதி இந்த ஆஃபரை ஒத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டம்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published: