• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மகனுடன் சண்டையிடும் விஜய் சேதுபதி - வைரலாகும் வீடியோ!

மகனுடன் சண்டையிடும் விஜய் சேதுபதி - வைரலாகும் வீடியோ!

தனது மகன் சூர்யாவுடன் விஜய்சேதுபதி

தனது மகன் சூர்யாவுடன் விஜய்சேதுபதி

9-ம் வகுப்பு படித்து வரும் சூர்யா மாநில அளவிலான குத்துச் சண்டை சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது

  • News18
  • Last Updated :
  • Share this:
    சிந்துபாத் படப்பிடிப்பின் போது தனது மகனுடன் விஜய்சேதுபதி சண்டைபோடும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களை அடுத்து இயக்குநர் அருண்குமார் - விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் தனது மகன் சூர்யாவையும் நடிகர் விஜய்சேதுபதி அறிமுகம் செய்துள்ளார். இருவரும் இந்தப் படத்தில் திருடர்களாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். விஜய் சேதுபதியின் பிறந்தநாளன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.



    அதைத்தொடர்ந்து கடந்த 11-ம் தேதி படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா ஒருசில காட்சிகளில் மட்டுமே இடம்பெற்றிருந்தார்.

    இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் ஜாலியாக சண்டைபோடும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



    கோடை விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அஜித்தை அரசியலுக்கு அழைத்த சுசீந்திரன்... - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: