• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மகனைத் தொடர்ந்து மகளையும் திரையுலகில் அறிமுகப்படுத்தும் விஜய் சேதுபதி

மகனைத் தொடர்ந்து மகளையும் திரையுலகில் அறிமுகப்படுத்தும் விஜய் சேதுபதி

முகிழ்

முகிழ்

விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும், ஸ்ரீஜா என்ற மகளும் இருக்கிறார்கள்.

  • Share this:
    தனது மகன் சூர்யாவை அடுத்து மகள் ஶ்ரீஜாவையும் நடிப்புலகிற்கு வரவேற்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

    தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்திருக்கும் 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.  இது தவிர, 'கடைசி விவசாயி', 'மாமனிதன்', 'லாபம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'துக்ளக் தர்பார்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்',  'கொரோனா குமார்' என அவர் கைவசம் இருக்கும் படங்களின் பட்டியல் நீள்கிறது.



    விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும், ஸ்ரீஜா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் மகன் சூர்யா அவரது 'சிந்துபாத்' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மகளையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் விஜய் சேதுபதி.

    நடிகை ரெஜினா உடன் அவர் இணைந்து நடிக்கும் 'முகிழ்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் ஶ்ரீஜா. கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: