பாலிவுட் நடிகர் அமீர் கானுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 10-வது இந்திய திரைப்பட விழா 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 22-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. திரையுலகினர் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள்னர்.
விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகியவற்றுக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் இந்திய சினிமாவில் சமத்துவம் என்ற கவுரவ விருதும் வழங்கப்பட்டது.
இதனிடையே பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த விஜய்சேதுபதி, நான் நடிகர் ஷாரூக்கான் மற்றும் அமிதாப் பச்சனின் மிகத்தீவிரமான ரசிகன். இருவரும் நடித்த நிறைய படங்களை நான் பார்த்திருக்கிறேன்.
இந்தியில் வெளியான பிங்க் படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். விழாவுக்கு தலைமை ஏற்க வந்திருந்த ஷாரூக்கானைச் சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.
நான் நடித்து வரும் சங்கத் தமிழன் ஷூட்டிங்கின் போது அங்கு பாலிவுட் நடிகர் அமீர் கான் வந்தது உண்மைதான். இருவரும் நீண்ட நேரம் பேசினோம். விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளோம். படத்தின் பெயர், கதை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ பார்க்க: ஜெயலலிதாவை மனதில் வைத்து பெண்ணாக நடித்தேன் - நடிகர் ஆனந்தராஜ்
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.