தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

Vijay Sethupathi | நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு

  • Share this:
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. பன்முகக் கதாபாத்திரங்களை ஏற்று முன்னணி நடிகராகவும், நாயகனாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் விஜய் சேதுபதி.

நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என எல்லா கதாபாத்திரங்களையும் ஒரே நேரத்தில் ஏற்று நடிக்க கூடிய துணிச்சல் உள்ள நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, முதன்முதலில் நாயகனாக நடித்து வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி 2010 ஆம் அண்டு வெளியானது.

தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து, கதை தேர்வினால் ஒரு நாயகன் உச்சத்தை தொட முடியும் என நிரூபித்த நடிகர் விஜய் சேதுபதி. நாயகனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கி இருந்த காலகட்டத்தில் துணிச்சலுடன் ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தின் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விஜய் சேதுபதி, மீண்டும் ஒருமுறை சீதக்காதி திரைப்படத்திலும் 80 வயது தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கை வேடத்திலும், பேட்ட மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து எல்லா கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் துணிச்சல் உள்ளவராக தன்னை நிரூபித்துள்ள விஜய் சேதுபதி, மார்கோனி மதாய் திரைப்படத்தின் மூலம் மலையாளத்திலும், சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும், லால் சிங்க் சந்தா திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் நடித்து பிற மொழிகளிலும் தன்னுடைய வர்த்தக எல்லைகளை விரிவு படுத்தி சாதனை படைத்து வருகிறார்.

விஜய் சேதுபதியின் இந்த இந்த பத்தாண்டு சாதனையை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
Published by:Suresh V
First published: