Home /News /entertainment /

பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் ! 6 மொழிகளில் தயாராகும் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி..

பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் ! 6 மொழிகளில் தயாராகும் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி..

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை முன்னிட்டு தான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார்.விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தை தொடர்ந்து துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளான இன்று ரசிகர்கள் அனைவரும் விஜய் சேதுபதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு அவர் பட்டாகத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படமும் இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்த வந்த நிலையில், பட்டாக்கத்தியில் கேக் வெட்டியது குறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் விளக்கம் அளிந்திருந்தார்.

    அதில்‘எனது பிறந்தநாளை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும்.அதனால் அந்த படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடும் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டினேன்.இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன்’ என்று தெரிவித்து கொள்கிறேன்.இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என கூறியிருந்தார்.இவரின் இந்த பதில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்துவிட்டது.

    தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் வேகமாக கமீட் ஆகி வரும் விஜய் சேதுபதி தனது அடுத்தப்பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.காந்தி டாக்ஸ் என்ற ஹிந்தி படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.இதன் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.அதில் ‘சில நேரங்களில் அமைதி மிகுந்த சத்தத்தை தரும்.எனது பிறந்தநாளை முன்னிட்டு எனது புதிய படத்தின் போஸ்டரை வெளியிடுகிறேன்.மெளன படமான காந்தி டாக்ஸ்  எனக்கு புதிய ஆரம்பம் மற்றும் புதிய சவாலாக அமையும்.உங்கள் அன்பும்,ஆதரவும் என்றும் எனக்கு தேவை’ என்று கூறியுள்ளார்.

     


    கிஷோர் பிலேக்கர் இயக்கும் இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி,கன்னடா, மலையாளம் ,மராத்தி என 6 மொழிகளிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actor vijay sethupathi, Cinema

    அடுத்த செய்தி