ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vijay Sethupathi, Tamannaah: மாஸ்டர் செஃப் - வைரலாகும் விஜய் சேதுபதி, தமன்னா புகைப்படம்!

Vijay Sethupathi, Tamannaah: மாஸ்டர் செஃப் - வைரலாகும் விஜய் சேதுபதி, தமன்னா புகைப்படம்!

விஜய் சேதுபதி மற்றும் தமன்னா

விஜய் சேதுபதி மற்றும் தமன்னா

தொலைக்காட்சிகளில் ஏற்கனவே சமையல் நிகழ்ச்சி இருந்தாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளிக்குப் பிறகு சமையல் நிகழ்ச்சியை இன்னும் விரிவாக நடத்த தொலைக்காட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் தமிழ் இந்தியா நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்தப் படப்பிடிப்பில் தமன்னா கலந்து கொண்டபோது விஜய் சேதுபதியுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமையல் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் உண்டு. நாடு நாடாகச் சென்று உணவுகளை ருசிப்பார்க்கும் மார்க் வெயின்ஸ் முதல்  உள்ளூர் உணவுக்கடைகளை வீடியோ எடுத்துப் போடும் லோக்கல் சாப்பாட்டுப் ப்ரியர்கள்வரை ஏராளமானோர் சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். கொரோனாவுக்குப் பிறகு பல தொழில்கள் நொடித்துப் போக, உணவுக்கடைகள் மட்டும் தெருவுக்கு நான்கு புதிதாக திறந்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொலைக்காட்சிகளில் ஏற்கனவே சமையல் நிகழ்ச்சி இருந்தாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளிக்குப் பிறகு சமையல் நிகழ்ச்சியை இன்னும் விரிவாக நடத்த தொலைக்காட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. அந்தவகையில் சன் தொலைக்காட்சி மாஸ்டர் செஃப் தமிழ் இந்தியா நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது. இதனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

விஜய் சேதுபதியை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து இந்த நிகழ்ச்சி குறித்து அறிவித்தார்கள். இப்போது அதன் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் தமன்னாவும் கலந்து கொண்டார். அப்போது விஜய் சேதுபதியும் அவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Also read... Amala Paul: அமலா பால் நடிக்கும் டைம் லூப் வெப் சீரிஸ்...!

சமையல் நிகழ்ச்சியை ஸ்டார் வார் ரேஞ்சுக்கு எடுக்கிறார்கள். சன்னுக்குப் போட்டியாக மற்ற தொலைக்காட்சிகள் எந்தெந்த நடிகரை களமிறக்கப் போகின்றனவோ தெரியவில்லை. இதில் ஆச்சரியமான விஷயம் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, இந்தியில்  நடித்துக் கொண்டே தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். அனைத்திற்கும் விஜய் சேதுபதிக்கு மட்டும் எப்படி நேரம் அமைகிறது என்பது தெரியவில்லை. எனக்கு டைமேயில்லை என்று அங்கலாயிப்பவர்கள் விஜய் சேதுபதியைப் பார்த்து படிக்கவும்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay Sethupathi, Tamannaah bhatia