• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vijay Sethupathi: மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி...!

Vijay Sethupathi: மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி...!

சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி

சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி

தற்போது சீனு ராமசாமி தனது புதிய படத்துக்காக லொகேஷன் தேடுவதற்காக மதுரை சென்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சீனு ராமசாமி இயக்கத்தில் பல படங்கள் நடித்துள்ள விஜய் சேதுபதி மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படம் நடிக்கயிருக்கிறார். இது ஆக்ஷன் த்ரில்லர் படமாக தயாராகிறது.

சின்னச் சின்ன வேடங்களில் தலைக்காட்டி வந்த விஜய் சேதுபதியை தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. அந்த நன்றிக்காக, அவர் எப்போது அழைத்தாலும் கால்ஷீட் தருவதை வழக்கமாக்கியுள்ளார் விஜய் சேதுபதி. தென்மேற்குப் பருவக்காற்றுக்குப் பிறகு இடம் பொருள் ஏவல் படத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்தார். லிங்குசாமி தயாரித்த அப்படம் கடன் பிரச்சனையால் வெளியாகாமல் போக, தர்மதுரை படத்துக்கு கால்ஷீட் தந்தார். அப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்தார். முழுப்படமும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது சீனு ராமசாமி தனது புதிய படத்துக்காக லொகேஷன் தேடுவதற்காக மதுரை சென்றுள்ளார். இந்தப் படத்தில் இளம் நாயகன் ஒருவன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதையடுத்து தாணு தயாரிப்பில், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்குவதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். படத்தின் கதை தாணுவுக்குப் பிடித்துள்ளது. விஜய் சேதுபதி தற்போது ஸ்கிரிப்டை படித்து வருகிறார். அவருக்கும் கதை பிடித்திருப்பதாக சீனு ராமசாமி கூறியுள்ளார்.

Also read... Nayanthara: சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்திருக்கும் படம் தேர்வு!

இதுவரை சீனு ராமசாமி இயக்கிய படங்கள் அனைத்தும் மனிதர்களின் உணர்வுகளை சொல்பவை. ஆக்ஷன் காட்சிகள் இல்லாதவை. அடுத்து விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படம் இதற்கு முற்றிலும் மாறாக ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் தயாராகப் போகிறதுசீனு ராமசாமி இயக்கத்தில் ஆக்ஷன் படத்தில் விஜய் சேதுபதி... கேட்கவே வித்தியாசமாகத்தான் இருக்கு.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: