சுமார் மூஞ்சி குமார் கேரக்டரில் மீண்டும் நடிக்கும் விஜய் சேதுபதி
சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்ற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட ஸ்டில்
- News18 Tamil
- Last Updated: June 23, 2020, 5:40 PM IST
கோகுல் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்தப் படத்தில் சுமார் மூஞ்சி குமார் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க அவருடன் நந்திதா, அஸ்வின், ஸ்வாதி ரெட்டி, பசுபதி, டேனியல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு பின்னர் காஷ்மோரா, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் தற்போது கொரோனா குமார் என்ற படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இந்தப் படத்தில் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தது போன்றே சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரம் ஒன்று கொரோனா லாக்டவுனில் மாட்டிக் கொண்டு தவிப்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் படிக்க: நடிகை சமந்தாவின் தோழிக்கு கொரோனா தொற்று - மீண்டு வந்ததை வீடியோவாக வெளியிட்ட ஷில்பா ரெட்டி
சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்தப் படத்தை சதீஷ் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்தப் படத்துக்கு பின்னர் காஷ்மோரா, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் தற்போது கொரோனா குமார் என்ற படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இந்தப் படத்தில் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தது போன்றே சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரம் ஒன்று கொரோனா லாக்டவுனில் மாட்டிக் கொண்டு தவிப்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.