Home » News » Entertainment » VIJAY SETHUPATHI ABOUT MASTER MOVIE MSB

மாஸ்டர் பற்றிய இந்த கேள்வியே அவசியமில்லாதது... விஜய் மட்டும் தான் காரணம் - விஜய் சேதுபதி பளீர் பேட்டி

மாஸ்டர் திரைப்படம் இவ்வளவு சிறப்பாக வர விஜய் தான் காரணம் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் பற்றிய இந்த கேள்வியே அவசியமில்லாதது... விஜய் மட்டும் தான் காரணம் - விஜய் சேதுபதி பளீர் பேட்டி
விஜய் சேதுபதி
  • Share this:
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் புதிதாக அமைந்துள்ள சென்னை கார்ஸ் கேர் எனும் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய்சேதுபதி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி நிறுவனத்தை திறந்து வைத்தார்.

நடிகர் விஜய்சேதுபதி வருவதை அறிந்து அப்பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார் சர்வீஸ் சென்டரை திறந்து வைத்த விஜய்சேதுபதி வெளியே சென்று காரில் ஏறமுடியாமல் மக்கள் வெள்ளத்துக்கு இடையே மிதந்தார். அவருடன் முட்டி மோதிக் கொண்டு பலர் செல்ஃபி க்ளிக்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய்சேதுபதியிடம் மாஸ்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார், மக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். இது நிறைய பேருக்கு வாழ்க்கையை , நம்பிக்கையை தொடங்கி வைத்திருக்கிறது. படம் முழுக்க முழுக்க இப்படி வந்திருக்கிறது என்றால் விஜய் தான் அதற்கு முக்கிய காரணம்” என்றார்.


இரண்டாவதாக ‘800’ படத்தைப் பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் முன்வைக்க, “‘800’ பட பிரச்னை முடிந்துவிட்டது. அதை மீண்டும் கிளப்பாதீர்கள்.” என்று கூறினார் விஜய்சேதுபதி.

மேலும் படிக்க: ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா - வீடியோ

மாஸ்டர் என்றாலே விஜய்சேதுபதி படம் என்று ஒரு சிலர் கூறுகிறார்களே என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொன்ன விஜய் சேதுபதி, “இந்தக் கேள்வியே அவசியமில்லாதது. விஜய்யால் மட்டும் தான் அந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது.” என்றார். மேலும் தமிழக தேர்தல் குறித்து பேசிய அவர், ஒரு வாக்காளனாக மட்டுமே தான் தேர்தலை பார்ப்பதாக தெரிவித்தார்.
First published: January 25, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories