ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காதலர் தினம்: ரேடியோவில் ‘96’ ஒலிச்சித்திரம் - விஜய்சேதுபதி அறிவிப்பு!

காதலர் தினம்: ரேடியோவில் ‘96’ ஒலிச்சித்திரம் - விஜய்சேதுபதி அறிவிப்பு!

த்ரிஷா, விஜய் சேதுபதி

த்ரிஷா, விஜய் சேதுபதி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

காதலர் தினத்தை முன்னிட்டு‘96’ திரைப்படம் ரேடியோ சிட்டி எஃப்மில் ஒலிச்சித்திரமாக ஒலிபரப்பப்படவுள்ளது.

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 96. காதலை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவி கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவும் நடித்திருந்தனர்.

பள்ளிப்பருவ காதலைப் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. இந்த வெற்றிக்கு காரணம் படத்தின் கதை, நடிகர்களின் தனித்துவமான நடிப்பு என பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் கோவிந்த் வசந்தா இசைக்கும் முக்கிய பங்கு இருந்தது.

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் கன்னடம், மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு இத்திரைப்படம் ரேடியோ சிட்டி பண்பலையில் இரவு 9 மணிக்கு  ஒலிச்சித்திரமாக ஒலிபரப்பாகிறது. இத்தகவலை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ‘நீங்கள் சொன்னது சரிதான்’... மதமாற்றம் குறித்த விஜய்சேதுபதியின் கருத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஆதரவு

First published:

Tags: 96 movie, Actor vijay sethupathi