தென்னிந்திய சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான, திறமையான இயக்குனர்களில் சஞ்சீவ் கே குமார் மிகவும் முக்கியமானவர். பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். தற்போது, மிகப்பரவலாக பேசப்பட்டு வரும் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மாஸ்டர்செஃப் சீரிஸின் இயக்குனராக பொறுப்பேற்றிருக்கும் இவர், எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணியாற்றி இருந்தாலும், இது மிகவும் சவாலாக இருக்கிறது என்று கூறினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் தயாரிக்கப்பட்டு வரும் மாஸ்டர்செஃப் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் டைரக்டர் எகனாமிக் டைம்ஸ் உடன் அவருடனான உரையாடலில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியைப் பற்றி பெருமையுடன் பேசினார்.
“ஒரு நிகழ்ச்சி மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களை சென்றடைய பிரபலங்கள் அவசியம். இந்த நிகழ்ச்சிக்கு, விஜய் சேதுபதியை விட சிறந்த தொகுப்பாளர் நிச்சயம் இல்லை. நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை, இப்போது நிறைவேறியிருக்கிறது” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார் சஞ்சீவ்.
Also read : ரியாலிட்டி ஷோக்களில் என்ட்ரி கொடுக்கும் வெள்ளித்திரை பிரபலங்கள்!
“ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே நாங்கள் விஜய் சேதுபதியிடம் மாஸ்டர்செஃப் தமிழ் பற்றி கூறினோம். அவர் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார். அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்கவும் தேதிகளை வழங்கத் தயாராக இருந்தார். எனவே, ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த உடனேயே, பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, தமிழ் பதிப்பு ஒளிபரப்பத் தயாராக உள்ளது, அதன் பின்பு, தெலுங்கிலும் ஒளிபரப்பாக இருக்கிறது” என்று, கூறினார் நிகழ்ச்சியின் இயக்குனர்.
விஜய் சேதுபதியின் உணவு மீதான பிரியம் மற்றும் ஆர்வம் பற்றியும் பகிர்ந்து கொண்டார் சஞ்சீவ். “இங்கே நிறைய நபர்களுக்கு விஜய் மிகப்பெரிய சாப்பாட்டுப் பிரியர் என்று தெரியாது. இவர் சமைப்பதில்லை என்றாலும், உணவின் மீதான ஆர்வம் மிகவும் அற்புதமானது. அது, இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அவர் காட்டிய ஆர்வமும், பங்களிப்பும், நிகரில்லாதது” என்று தெரிவித்தார்.
Also Read : நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசை கொலை செய்தது யார்? விரைவில் வெளியாகப்போகும் உண்மை..
“நாங்கள் தமிழ் உணவு பற்றி நிறைய பேசினோம். அவர் எங்களுடன் உள்ளூர் உணவுகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் பல தெரியாத உணவுகளைப் பற்றி பகிர்ந்து கொண்டார். இருவரும் கலந்தாலோசித்து பல புதிய யோசனைகளை செயல்படுத்தினோம். அது மட்டுமின்றி, அவருக்கென்று உரிய தனித்துவமான ஸ்டைல்கள் நிகழ்ச்சியின் பகுதியாக விளங்குகிறது. தன்னுடைய புதிய ரசிகர்களுக்காக, புதிதாக முயற்சி செய்ய விஜய் தயங்கியதே இல்லை” என்று கூறினார்.
நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் பற்றி பேசிய போது, உணவு என்பது உணர்வு சார்ந்தது. தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலிருந்து வந்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும், உணவும் சமைப்பது பேரார்வம் என்பதையும் கடந்ததாகக் காணப்பட்டது. விஜய் சேதுபதி, உணவு செய்முறைகள் பற்றிய கேள்விகள் கேட்பதிலிருந்து, பரிமாறும் முறை வரை, பங்கேற்பாளர்களுக்கு உதவியாக, அவர்கள் சமையல் திறன்களை மேம்படுத்த அவர்களுக்கு பெரிய ஆதரவாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மாஸ்டர்செஃப் தமிழ், ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதியன்று, சனிக்கிழமை முதல் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay Sethupathi, Sun TV