ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

போலந்து நாட்டில் `சர்கார்’ அமைக்கும் விஜய்... வெளியானது புதிய அப்டேட்!

போலந்து நாட்டில் `சர்கார்’ அமைக்கும் விஜய்... வெளியானது புதிய அப்டேட்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

சர்கார் படம் போலந்து நாட்டில் வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சர்கார் படம் போலந்து நாட்டில் வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி,பழ.கருப்பையா, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படம் குறித்து பேசியிருக்கும் முருகதாஸ் சர்கார் அரசியல் படம் தான் என்றும், ஆனால் எந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் அரசியல் தலைவர்களையும் கேலி பேசாமல், மக்கள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனும் கருத்தை அடிப்படையாய் கொண்ட அரசியல் படம் என்றும் கூறியிருந்தார்.

தொடர்ந்து வரும் சர்கார் அப்டேட்கள் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இந்நிலையில் படம் போலந்து நாட்டின் 4 நகரங்களில் வெளியாக இருக்கிறது. போலந்து நாட்டின் உரிமையை செவன்த் சென்ஸ் சினிமாட்டிக்ஸ் (7Th sense cinematics) நிறுவனம் பெற்றுள்ளது.

போலந்து நாட்டில் படம் வெளியாகும் தேதி மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக செவன்த் சென்ஸ் சினிமாட்டிக்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயன் நடித்திருந்த சீமராஜா படத்தை போலந்தில் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Watch : 39-வது பிறந்த நாளை கொண்டாடும் அமரேந்திர பாகுபலி – புகைப்படத் தொகுப்பு

First published:

Tags: 7th sense cinematics, Actor vijay, Poland, Sarkar, Sarkar movie