மாஸ்டர் செகண்ட் லுக்... விஜய் - சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு!

மாஸ்டர் செகண்ட் லுக்... விஜய் - சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு!

 • Share this:
  நாளை மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. விஜய்யின் 64-வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

  அந்தப் போஸ்டரில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் செகண்ட் லுக்கை பொங்கல் மற்றும் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறது படக்குழு. எனவே நாளை வெளியாகும் செகண்ட் லுக் போஸ்டர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக அமையும் என்பதில் ஐயமில்லை.

  வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தைத் திரைக்குக் கொண்டு வர முடிவு செய்திருக்கும் படக்குழு, ரிலீசுக்கு 3 மாதங்களுக்கு முன்பே அனைத்து ஏரியாக்களிலும் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  மேலும் படிக்க: துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த அதர்வா!
  Published by:Sheik Hanifah
  First published: