ஜேடி மாஸ்டரின் பூனை இருப்பது இங்கே தான் - விஜய் நண்பரின் பதிவு

ஜேடி மாஸ்டரின் பூனை இருப்பது இங்கே தான் - விஜய் நண்பரின் பதிவு

மாஸ்டர்

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கும் பூனை தற்போது எங்கே இருக்கிறது என்பதற்கு விடை கிடைத்திருக்கிறது.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்கில் வெளியான படம் மாஸ்டர். ஊரடங்கில் தளர்வுகள் அளித்து திரையரங்குகள் திறந்த பின் வெளியான முதல் பெரிய நடிகரின் படம் என்பதோடு வசூலிலும் சாதனை படைத்தது.

50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப அரசு அனுமதித்த சூழ்நிலையில் பெரிய அளவில் வசூல் சாதனை நடத்தி மக்களை திரையரங்குகளை நோக்கி வரவழைத்த படமாக மாஸ்டர் அமைந்தது.

திரையரங்குகள் மட்டுமல்லாது சமீபத்தில் ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்யுடன் சில காட்சிகளில் நடித்திருக்கும் பூனை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. படம் பார்த்த பலரும் அந்த பூனை எங்கே, யாரிடம் இருக்கிறது என்று சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. ஒரு சிலர் விஜய் சேதுபதி வீட்டில் அந்தப் பூனை இருப்பதாக கூறி வந்தனர்.

ஆனால் உண்மையில் அந்தப் பூனை எங்கே இருக்கிறது என்பதற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் தனது வீட்டில் தான் அந்தப் பூனை வளர்ந்து வருவதாகக் கூறி அதற்கான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் சஞ்சீவின் மகள் பூனையைத் தடவிக் கொடுத்தபடி அருகில் அமர்ந்திருக்கிறார்.



நடிகர் சஞ்சீவின் இந்த ட்விட்டர் பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: