விஜய் பிறந்தநாளில் மீண்டும் திரைக்கு வரும் ‘பிகில்’ - ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் பிறந்தநாளில் மீண்டும் திரைக்கு வரும் ‘பிகில்’ - ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஜய்

விஜய் பிறந்தநாளன்று மீண்டும் பிகில் படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • Share this:
  நடிகர் விஜய் வரும் ஜூன் 22-ம் தேதி அன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

  இந்நிலையில் ஜெர்மன் மற்றும் பிரான்ஸில் வரும் 22-ம் தேதி அன்று பிகில் படம் திரையிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கிருக்கும் ரசிகர்கள் உற்சாகத்துடன் விஜய் பிறந்தநாளைக் கொண்டாட இருக்கின்றனர்.

  தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. கொரோனா பிரச்னை முடிவடைந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே மாஸ்டர் படத்தின் உறுதியான ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும். ரிலீஸ் தேதியுடன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே விஜய் பிறந்தநாளில் மாஸ்டர் படத்தின் ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர் விஜய்யின் தீவிர ரசிகர்கள்.  வழக்கமாக நலத்திட்ட உதவிகள் வழங்குவது, விஜய்யின் ஹிட் படங்களை மீண்டும் திரையிட்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடி வந்த ரசிகர்களுக்கு இந்த ஆண்டு இப்படி இருக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

  மேலும் படிக்க: காவல் நிலையத்துக்கு கிருமிநாசினி இயந்திரம் வழங்கிய விஜய் ரசிகர்கள் 

  மேலும் படிக்க: கொரோனாவிலிருந்து மீண்ட விஜய்யின் தமிழன் பட இயக்குநர் - மருத்துவச் செலவுகளை ஏற்ற தயாரிப்பாளர்கள்
  Published by:Sheik Hanifah
  First published: