ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிகில் படத்தால் ரூ.20 கோடி நஷ்டமா? தயாரிப்பாளர் விளக்கம்

பிகில் படத்தால் ரூ.20 கோடி நஷ்டமா? தயாரிப்பாளர் விளக்கம்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

பிகில் படத்தால் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு தயாரிப்பாளர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் நயன் தாரா, டேனியல் பாலாஜி, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

  கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. விமர்சன ரீதியாக படம் சறுக்கினாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.

  பிகில் படத்தின் வசூல் நிலவரம் தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனம் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனிடையே பிகில் ரூ.20 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அந்தப் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரும், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

  ஆனால் அவ்வாறு நான் சொல்லவில்லை என்றும், இந்தத் தகவல் தவறானது என்றும் அர்ச்சனா கல்பாத்தி வெளிப்படையாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: Ponmagal Vandhal | பொன்மகள் வந்தாள் - விமர்சனம்


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor vijay, Archana Kalpathi, Bigil