நடிகர் விஜயின் சாதனை படைத்த செல்ஃபி புகைப்படம்... 2020ம் ஆண்டின் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட பட்டியலில் தேர்வு

நடிகர் விஜயின் சாதனை படைத்த செல்ஃபி புகைப்படம்... 2020ம் ஆண்டின் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட பட்டியலில் தேர்வு

சாதனை படைத்த நடிகர் விஜயின் செல்ஃபி புகைப்படம்

நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் வேனுக்கு மேல் ஏறி தன்னைப் பார்க்க வந்திருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் 2020ம் ஆண்டின் அதிகம் ரிடுவீட் செய்யப்பட்ட புகைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

  • Share this:
    கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய், வேனுக்கு மேல் ஏறி தன்னைப் பார்க்க வந்திருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். 

    விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்றது. பிப்ரவரி 1ம் தேதி முதல் 12 தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. இடையில் வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த நிலையில் 6ம் தேதி பாஜகவினர் என்.எல்.சி சுரங்க நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த அனுமதி கொடுத்தது யார் உடனே அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பினர்.

     

     



     

     

    இதனைத் தொடர்ந்து நெய்வேலி 2வது சுரங்கம் முன்பு ரசிகர்கள் அதிக அளவு குவிந்தனர். 2 நாட்கள் காவல்துறையினர் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர். இந்நிலையில், மீண்டும் 5000க்கும் மேற்பட்டோர் சுரங்கம் முன்பு குவிந்தனர். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வெளியே வந்த விஜய், வேன் மீது ஏறி தனது ரசிகர்களைக் கண்டு கையசைத்து, பின்னர் ரசிகர் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    விஜய்யைக் காண 6 வயது முதல் 60 வயதினர் வரை வந்திருந்தனர். இந்த புகைப்படம் இணையம் மட்டும் அல்லாது, விஜய் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தது. ட்ரெண்டிகில் முதல் இடம் பிடித்து அன்றைய தினமே சாதனை படைத்த நிலையில், தற்போது இந்த புகைப்படம் குறித்து ட்விட்டர் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

     

     



     

     

    அதில், 2020ம் ஆண்டின் அதிகம் ரிடுவீட் செய்யப்பட்ட டுவீட் என பதிவிட்டுள்ளது . இது தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
    Published by:Sankaravadivoo G
    First published: