மாஸ்டர் தந்த நம்பிக்கையால் தனது படத்தை வெளியிடும் விஷால்

மாஸ்டர் தந்த நம்பிக்கையால் தனது படத்தை வெளியிடும் விஷால்

விஷால்

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு நவம்பரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிதாக மக்கள் கூட்டம் வராமல் இருந்தது.

 • Share this:
  பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளை நோக்கி பார்வையாளர்களை படையெடுக்கச் செய்திருக்கிறது.

  நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

  கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு நவம்பரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிதாக மக்கள் கூட்டம் வராமல் இருந்தது. இந்நிலையில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் மீண்டும் மக்களின் கவனத்தை திரையரங்கை நோக்கி வரச் செய்திருக்கிறது. 50% பார்வையாளர்களுடன் திரையிடப்பட்ட மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி வசூலித்திருக்கிறது.

  இதனால் மற்ற படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்தப் படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைப்பெற்ற நிலையில், மாஸ்டர் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

  ’சக்ரா’ படத்தை எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ளார். விஷால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக, ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: