Exclusive | தீபாவளிக்கு மாஸ்டர் வெளியீடு இல்லை.. தயாரிப்பாளர் திட்டவட்டம்..

Exclusive | தீபாவளிக்கு மாஸ்டர் வெளியீடு இல்லை.. தயாரிப்பாளர் திட்டவட்டம்..

மாஸ்டர்

தயாரிப்பாளர் லலித்குமார் தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
தீபாவளிக்கு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியீடு இல்லை என்று தயாரிப்பாளர் லலித் குமார் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி வெளியிடத் தயாராக இறுகின்றது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு 10-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருக்கும் நிலையில் தீபாவளிக்கு மாஸ்டர் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியது.

இது குறித்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ள தயாரிப்பாளர் லலித்குமார், தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். மேலும் பொங்கலுக்கு படம் வெளியாகுமா இல்லையா என்பதை தற்போது சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

ALSO READ |  2021 ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவாரா? - கூகுளில் தேடிய சிஎஸ்கே ரசிகர்கள்!

இந்நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் நவம்பர் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்கை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசின் உத்தரவு படி 50% இருக்கைகளுடன் படம் திரையிடப்பட்டால் மாஸ்டர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் லாபத்தை எடுக்க முடியாது என்ற காரணத்தினால் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.



இதற்கு முன்னதாக மாஸ்டர் OTTயில் வெளியாகுமா என்ற கேள்விக்கு நிச்சயமாக திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.
Published by:Sankaravadivoo G
First published: