நடிகரின் தம்பியை ஹீரோவாக்கும் முயற்சியில் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்

நடிகரின் தம்பியை ஹீரோவாக்கும்  முயற்சியில் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்

விஜய்

தனது மருமகன் அதாவது அதர்வாவின் சகோதரர் ஆகாஷையும் ஹீரோவாகத் திட்டமிட்டுள்ளாராம்.

  • Share this:
தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். படத்திற்கு இசை அனிருத். உலகளவில் 200 கோடிக்கும் மேல் வசூலித்த இந்தப் படம், OTT வெளியான போதிலும் திரையரங்குகளில் இன்னும் கூட்டம் குறையவில்லை.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷை ஹீரோவாக அறிமுகப்படுத்த 'மாஸ்டர்' தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ பல திரைப்படங்களைத் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளார், இந்தத் திட்டங்களில் ஒன்றாக தனது மருமகன் அதாவது அதர்வாவின் சகோதரர் ஆகாஷையும் ஹீரோவாகத் திட்டமிட்டுள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோ, ஆகாஷ் முரளியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: