மாஸ்டர் படத்தை புகழ்ந்த அஸ்வின்!

அஸ்வின் - விஜய்

மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 3 வாரம் ஆன நிலையில், ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை.

  • Share this:
    விஜய்யின் மாஸ்டர் படத்தை கிரிக்கெட் பிரபலம் ஒருவர் ட்விட்டரில் புகழ்ந்துள்ளார்.

    நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்க, அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்க, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.



    எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். கொரோனா தொற்று நோயால் பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. அதனால் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகுமோ என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், எத்தனை நாள் ஆனாலும் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக இருந்தனர். இதற்கிடையே நவம்பரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிதாக ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி படையெடுக்கச் செய்தது.

    இந்நிலையில் இன்று மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியானது. ஏற்கனவே திரையரங்கில் வெளியாகியிருந்தாலும் ஓடிடி-க்கான வரவேற்பு குறையவில்லை. அதே நேரத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 3 வாரம் ஆன நிலையில், ரசிகர்கள் கூட்டமும் குறையவில்லை.

    இதற்கிடையே மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடலின் சிறு வீடியோவை பதிவிட்டு, ’வேற மாரி’ எனக் குறிப்பிட்டு ஃபயர் எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார், கிரிக்கெட் வீரர் அஸ்வின்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: