விஜய்யின் ‘மாஸ்டர்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய்யின் ‘மாஸ்டர்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மாஸ்டர்

  • Share this:
    ‘மாஸ்டர்’ இசைவெளியீட்டு விழாவில் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    படப்பிடிப்பு முடிவடைந்திருக்கு புரமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, இன்று இசை வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த விழாவில் மார்ச் 22-ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    ‘மாஸ்டர்’ பட விழாவில் தாயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!




    இதுஒருபுறமிருக்க கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதை தடுக்க தமிழக அரசு கேரளா எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

    ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் கொடுத்த சர்ப்ரைஸ்!




    கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் தடுக்கப்பட இன்னும் கால அவகாசம் தேவைப்படுமானால் தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் மூட வாய்ப்புள்ளது. எனவே மாஸ்டர் திரைப்படம் அறிவித்தபடி ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் பார்க்க...படிக்க: ‘மாஸ்டர்’ பட விழாவில் தாயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

    Published by:Sheik Hanifah
    First published: