மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் ரன்னிங் டைம் இதுதான்

மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் ரன்னிங் டைம் இதுதான்

மாஸ்டர்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஒன்றரை நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
ஒவ்வொரு திரைப்படமும் திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பு மத்திய தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். அதன்படி அனைவரும் பார்க்கும் வகையில் ‘யு ’சர்டிபிகேட், பெரியோர்களின் முன்னிலையில் பார்க்கும் வகையில் யுஏ சான்றிதழும் பெரியவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் ஏ சான்றிதழும் வழங்கப்படுகிறது.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் மாஸ்டர் திரைப்படமும் தணிக்கை குழுவிற்கு முன்பு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஒன்றரை நிமிட காட்சிகளை நீக்குவதற்கு பரிந்துரைத்துள்ளனர். மேலும் பல வார்த்தைகளை மியூட் செய்யவும் பரிந்துரைத்தனர். இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டால் யூ ஏ சர்டிபிகேட், அல்லது உள்ளது உள்ளபடியே வெளியிட்டால் ஏ சர்டிபிக்கேட்டும் வழங்கப்படும் என்று தணிக்கை குழு தெரிவித்திருந்தது.தற்போது அந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு ஒன்றரை நிமிட காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிட மாஸ்டர் படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதன்படி படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விஜய் திரைப்படத்திற்கு அதிகப்படியான சிறுவர்கள் வருவார்கள் என்பதால் முடிந்த இந்த முடிவினை படக்குழு எடுத்துள்ளது. சிறுவர்கள் பார்க்கும் வண்ணம் வன்முறை காட்சிகள் ஆபாச வார்த்தைகள் போன்றவை படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.மாஸ்டர் திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் இருக்கிறது. அதில் கடைசி பத்து நிமிடங்கள் படத்தின் மேக்கிங் காட்சிகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நெய்வேலியில் ரசிகர்கள் மத்தியில் விஜய் எடுத்த செல்ஃபி உடன் திரைப்படம் நிறைவு பெற இருக்கிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: