முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Master Review - மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

Master Review - மாஸ்டர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

மாஸ்டர்

மாஸ்டர்

விஜய் ஹீரோவாக இருந்தாலும் படத்தின் நிஜ ஹீரோவாக படத்தையே தாங்கி நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து நடிப்பது குறித்த செய்தி வெளியானது முதலே மாஸ்டர் படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

எனினும் கொரோனா பரவல் காரணமாக 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இந்தப் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மாஸ்டர் நிறைவேற்றியதா என்றால் ஓரளவு பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லலாம்.

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் ரெய்டு விடுவதுதான் மாஸ்டர் படத்தின் மையக்கரு. இதை மூன்று மணிநேர சினிமாவாக மாற்றியதில் சில இடங்களில் ஜெயித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் சொதப்பியிருக்கிறார்.

கதைப்படி விஜய் ஹீரோவாக இருந்தாலும் படத்தின் நிஜ ஹீரோவாக படத்தையே தாங்கி நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் மிகப்பெரிய பலம் அவர் வரும் காட்சிகளே.

முதல் பாதியில் குடிக்கு அடிமையான பேராசிரியராகவும் இரண்டாம் பாதியில் சீர்த்திருத்த பள்ளி ஆசிரியராகவும் விஜய்க்கு இப்படத்தில் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் திரைக்கதையில் சுவாரசியம் கூட்ட தவறியதும் அவருடைய இமேஜூக்காக வழிந்து திணிக்கப்பட்ட காட்சிகளும் படத்துக்கு வேகத்தடையாக அமைந்துள்ளன.

படத்துக்கு படம் ஏதோவொரு அரசியலை முன்னிறுத்தி பேசும் விஜய், இந்த படத்தில் அரசியல் குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். மேலும் அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதாகவும் மக்கள் சொல்வதை அரசாங்கம் கேட்பதில்லை என்பது போன்ற அரசியல் வசனங்களும் இப்படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

விஜய், விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்களில் அர்ஜுன் தாஸ் மற்றும் பூவையார் ஆகியோர் மட்டுமே ஓரளவு மனதில் நிற்கிறார்கள். மற்றபடி ஹீரோயின் உட்பட டஜன் கணக்கில் நடிகர்கள் இருந்தும் யாருடைய கதாபாத்திரமும் வலுவாக அமையவில்லை.

மேலும் படிக்க: Master Release: தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் சேதுபதிக்கு அடுத்தபடியாக படத்தின் இன்னொரு பலம் அனிருத்தின் பின்னணி இசை. கதைக்கு தேவையில்லாத வகையில் பாடல்கள் துருத்திகொண்டு வந்தாலும் பின்னணி இசையில் படத்துக்கு கூடுதலாக மாஸ் சேர்க்க முயற்சி செய்திருக்கிறார் அனிருத்.

மொத்தத்தில் மாஸ்டர் படத்தை விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்புக்காகவும் அவர் வரும் காட்சிகளுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.

First published:

Tags: Actor vijay, Actor vijay sethupathi, Kollywood, Master