ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாஸ்டர் ரிலீசில் யாரும் எதிர்பார்க்காத புதிய சிக்கல் - தள்ளிப் போகிறதா ரிலீஸ் தேதி?

மாஸ்டர் ரிலீசில் யாரும் எதிர்பார்க்காத புதிய சிக்கல் - தள்ளிப் போகிறதா ரிலீஸ் தேதி?

விஜய்

விஜய்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியது, பாஜக ஆர்ப்பாட்டம் என பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. அதைத்தொடர்ந்து இன்று மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமாரின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். அடுத்தடுத்து சிக்கலுக்கு இடையே படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், படத்தை ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கேரளாவில் வரும் 31ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நோய் தாக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் திரையரங்கு மூடல் மேலும் தொடர வாய்ப்பு உள்ளது. கேரளாவில் தமிழ் திரைப்படங்கள் அதிக அளவில் வெளியாவதோடு, விஜய்க்கு கேரளாவில் ரசிகர்களும் அதிகம்.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கேரள அரசு திரையரங்குகளை மூடியிருப்பது தொடருமானால் மாஸ்டர் திரைப்படத்தின் வர்த்தகம் பாதிக்கப்படும். இது படக்குழுவினருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது . மேலும், தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் திரையரங்குகள் மூடப்படக்கூடும். இதனால், மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா அல்லது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனைதொடர்ந்து தற்போது புது பிரச்னையாக, 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தில் தமிழகத்தில் வரும் 27-ம் தேதி முதல் புதிய படங்களை விநியோகிப்பதை நிறுத்தி வைப்பதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். இதனால் மார்ச் 27-ம் தேதிக்குப் பின்னர் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.

எனவே ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கும் மாஸ்டர், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் திட்டமிட்டபடி திரைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க: வரும் 27-ம் தேதிக்குப் பின் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை - விநியோகஸ்தர்கள் அதிரடி முடிவு

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor vijay, Master