Breaking | மாஸ்டர் - முன்பணத்தைக் கேட்டு போர்க்கொடி தூக்கும் விநியோகஸ்தர்கள்
மாஸ்டர் படத்தை வெளியிடுவதில் ஏற்கனவே தாமதம் ஏற்பட்டிருப்பதால் பொங்கலுக்கு படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

மாஸ்டர்
- News18 Tamil
- Last Updated: November 28, 2020, 1:32 PM IST
முன்பணத்தை திருப்பி கொடுக்குமாறு மாஸ்டர் திரைப்பட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். தயாரிப்பாளர்களும் அதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரங்கள் முழுவதும் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால் தற்போது வரை படத்தை நேரடியாக திரையரங்குகளில் வெளியிடுவதா அல்லது ஓடிடியில் வெளியிடுவதா என்று முடிவு எடுக்கப்படவில்லை என தயாரிப்பாளர் குழு மறுத்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி எங்களால் படத்தை வாங்க முடியாது என விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
படத்தை வெளியிடுவதில் ஏற்கனவே தாமதம் ஏற்பட்டிருப்பதால் பொங்கலுக்கு படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இதனடிப்படையில் பேசும்போது கொரோனாவுக்கு முன் அதிக விலை கொடுத்து படத்தை ஒப்பந்தம் செய்து இருந்தோம்.
ஆனால் தற்போது திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இப்போதும் அதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்களால் தொடர முடியாது. எனவே விலையை குறைத்து ஒப்பந்தம் செய்யுங்கள் என விநியோகஸ்தர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.விநியோகஸ்தர்கள் கேட்கும் தொகையில் படத்தை வெளியிட முடியாத பட்சத்தில் நேரடியாக ஓடிடியில் கொடுத்து விடலாம் என தயாரிப்பாளர்கள் கருதுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என கொண்டாட்ட மனநிலையில் உள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள். திரையரங்கு உரிமையாளர்களும் தங்களது வாழ்வாதாரம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கோரி வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் தயாரிப்புக் குழு கடுமையான குழப்பத்தில் இருக்கிறது. விரைவில் இதற்கான முடிவு எட்டப்பட இருக்கிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரங்கள் முழுவதும் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.