விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்துக்கு ‘A' சான்றிதழ்?

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்துக்கு ‘A' சான்றிதழ்?

மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
மாஸ்டர் திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் அதை நீக்க சென்சார் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அதற்கு படக்குழு சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் ‘A' சான்றிதழ் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரங்கள் முழுவதும் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் பொங்கலுக்கு திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கும் படக்குழு படத்தை தணிக்கைக்கு அனுப்பியிருக்கிறது. படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளதால் 9 இடங்களில் காட்சிகளை கத்தரிக்க அறிவுரை வழங்கியுள்ளாதாக கூறப்படுகிறது.

இதற்கு படக்குழு சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில்‘A'சான்றிதழே கிடைக்கும் என்றும் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் U/A சான்றிதழ் பெறமுடியும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : ரஜினிகாந்துக்கு 2-வது முறையாக சம்மன்

மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்க அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஜோடியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டால் 2021 புத்தாண்டு தினத்தில் மாஸ்டர் ட்ரெய்லர் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

2021-ம் ஆண்டு பொங்கல் ரிலீசுக்கு மாஸ்டர் ரிலீசாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் அதே நாளில் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் பிரதீப் குமார் இயக்கத்தில் விஜய் தனது 65-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: