மாஸ்டர் படத்தின் டிக்கெட் விலை ரூ.1000... வாட்ஸ் அப்பில் விற்பனை
மாஸ்டர் பட முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை ரூ.1000 என வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பி வருகின்றனர்.

மாஸ்டர்
- News18 Tamil
- Last Updated: January 12, 2021, 4:29 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
நாளை முதல் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் படத்தின் முதல் காட்சியைக் காண ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் 3 திரையரங்குகளில் திரையிடப்படும் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை ரூ.1000 என வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பி வருகின்றனர்.
முறைப்படுத்தப்பட்ட கட்டணத்துக்கு அதிகமாக டிக்கெட் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகமான காட்சிகளுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக மாஸ்டர் ரிலீசுக்கு 100% இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து பின்னர் மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பை வாபஸ் பெற்று 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருக்கிறது.
இதனிடையே கடைசி நேரத்தில் மாஸ்டர் படத்தை இணையத்தில் கசிய விட்டிருப்பதும் படக்குழுவுக்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது. இருந்தாலும் நாளை மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை வெளியான விஜய் படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
நாளை முதல் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் படத்தின் முதல் காட்சியைக் காண ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் 3 திரையரங்குகளில் திரையிடப்படும் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை ரூ.1000 என வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பி வருகின்றனர்.
முறைப்படுத்தப்பட்ட கட்டணத்துக்கு அதிகமாக டிக்கெட் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகமான காட்சிகளுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.