Home /News /entertainment /

மாஸ்டர் திரைப்படத்தை அதிக விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் மீண்டும் எதிர்ப்பு

மாஸ்டர் திரைப்படத்தை அதிக விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் மீண்டும் எதிர்ப்பு

மாஸ்டர்

மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படத்தை அதிக விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் தரப்பில் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தை வெளியிட முடியாமல் படக்குழுவினர் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில் படத்தை ஓ.டி.டி தளத்தில் விற்பனை செய்ய படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்திய தகவலை அறிந்த நடிகர் விஜய் தனது படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட தயாரிப்பாளர் முடிவுசெய்து விநியோகஸ்தர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இன்னும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், முன்னதாகவே பல கோடி ரூபாய் கொடுத்து படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பணத்தை திரும்ப கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ‘ரஜினி, கமலை அடிக்கிற அடியில், விஜய் மட்டுமல்ல...’ சீமான் சரவெடி பேட்டி

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் படம் திரைக்கு வந்து எதிர்பார்த்த அளவு லாபம் ஈட்டவில்லை எனில் வட்டியுடன் நஷ்டத்தை ஈடுசெய்ய தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டும் அதனை சில விநியோகஸ்தர்கள் ஏற்க மறுப்பதால் தயாரிப்பு நிறுவனமே நேரடியாக படத்தை திரையிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்...
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor vijay, Kollywood, Master

அடுத்த செய்தி