விஜய்யின் ‘மாஸ்டர்’ சென்சார் அப்டேட் - ரசிகர்கள் குஷி

விஜய்யின் ‘மாஸ்டர்’ சென்சார் அப்டேட் - ரசிகர்கள் குஷி

மாஸ்டர் பட ஸ்டில்

‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரங்கள் முழுவதும் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனிடையே ஓடிடி தளத்தில் மாஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை ஆரம்பம் முதலே படக்குழு மறுத்து வந்தது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதேவேளையில் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வராததால் மக்கள் வருகையும் சொல்லும் அளவுக்கு இல்லை. இதனால் பெரும்பாலான திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன. இதையடுத்து திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு அதிகமாக நிரப்ப தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதற்கு அரசு விரைவில் செவிசாய்க்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பி வரும்நிலையில் 2021-ம் ஆண்டு பொங்கல் தினத்துக்கு ‘மாஸ்டர்’ திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ‘மாஸ்டர்’ படத்தை தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளதால் 9 இடங்களில் காட்சிகளை கத்தரிக்க அறிவுரை வழங்கியுள்ளாதாக கூறப்படுகிறது.

இதற்கு படக்குழு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் மாஸ்டர் படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 13-ம் படம் திரைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படக்குழு இதுகுறித்த அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பிருக்கிறது.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: