Home /News /entertainment /

2020 ட்விட்டர் ட்ரெண்டிங்: முதலிடத்தில் மாஸ்டர்... கடைசி இடத்தில் தர்பார்

2020 ட்விட்டர் ட்ரெண்டிங்: முதலிடத்தில் மாஸ்டர்... கடைசி இடத்தில் தர்பார்

தர்பார் - மாஸ்டர்

தர்பார் - மாஸ்டர்

2020-ம் ஆண்டு தென்னிந்தியாவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்களின் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

2020-ம் ஆண்டு விரைவில் விடை பெற இருக்கும் நிலையில் இந்த ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டான ஹேஷ்டேக், ரீ-ட்வீட் ஆன புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2020-ம் ஆண்டில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவாக விஜய்யின் நெய்வேலி செல்ஃபி புகைப்படம் இடம்பெற்றது. அதேபோல் 2020-ம் ஆண்டு ட்ரெண்டிங்கில் சூரரைப்போற்று ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில் தற்போது 2020-ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட 10 தென்னிந்திய படங்களின் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் மாஸ்டர் திரைப்படம் உள்ளது. இரண்டாவது இடத்தில் வக்கீல் சாப் திரைப்படமும், மூன்றாவது இடத்தில் வலிமையும், 5-வது இடத்தில் சூரரைப்போற்று திரைப்படமும் உள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு இந்தப் பட்டியலில் 6-வது இடம் கிடைத்துள்ளது. ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம் 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்திருப்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் 2021-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor vijay, Darbar, Kollywood, Master, Rajinikanth

அடுத்த செய்தி